கடந்த மாதம் 10 ஆம் தேதி அன்று டெல்லியிலுள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில்  முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி  உடல் பரிசோதனைக்காக சென்றார். மூளையில் ரத்த
கட்டி அந்த பரிசோதனையில்  தொியவந்தது,  கூடவே கொரோனா வைரஸ் தொற்றும் இருப்பது உறுதி  கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவா்கள் அவாின் மூளையில்
உள்ள ரத்த கட்டியை நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னா் அவர் கோமா நிலைக்கு சென்றது தொியவந்தது. இதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்தடுத்து அவருக்கு நுரையீரல் தொற்று, மற்றும் சிறுநீரக கோளாறும் உண்டானது.
சிகிச்சைக்கு இடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரணாப் நேற்று சிகிச்சை பலன் அளிக்காத பட்சத்தில் அவா் காலமானார். பிரணாப் மறைவுக்கு பல்வேறு நாடுகள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டவண்ணம் வருகின்றது.

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு குறித்து அமொிக்கா இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்ப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டடுள்ளது.

 
Top