சென்னை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, நாகை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்பச்சலனம் ஏற்பட்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையின் புறநகா்ப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் வானம் இருக்கும் ஒரு சில இடங்களில் மழையும் பெய்யலாம்.

புதுவை, காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். தென்மேற்கு குமரிக் கடல்,அரபிக் கடல்,  மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு உண்டு. இம்மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல், தென்மேற்கு அரபிக் கடல்,  பகுதியில் காற்று பலமாக வீசும் காரணத்தால் கடலுக்கு மீனவர்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.




 
Top