கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல்  25-ந் தொடங்கி நாடு தழுவிய ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும்  இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது


கொரோனா பாதிப்பு  சென்னையில் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் வேகமாக அதிகரிக்க தொடங்கிவிட்டது. தற்போது நிலையில் தமிழகம் முழுவதும் ஒலு சில தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலுக்கு உள்ளது, 4-வது ஞாயிற்று கிழமையான இன்று எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்பது குறித்து கருத்து கேட்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி புதன் கிழமை காணொலி காட்சி மூலம் ஆலோசனை கேட்க உள்ளாா்.

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்திின்  பல்வேறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?  என்பது 29ஆம் தேதி நடைெபறும் ஆலோசனைக்கு பிறகு தெரியவரும், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள இந்த நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது,
 
Top