மும்பையில் கொரானா வைரஸ் தொற்று முதன் முதலாக ஒரு நாளில் 700 என்ற அளவில் குறைந்துள்ளது. இந்த அளவை எட்ட 100 நாட்கள் ஆகியுள்ளது.


கரோனா பரவுவதை பல்வேறு முறைகளில் குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும்,  நாடுமுழுவதும் வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை.
சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 81 ஆயிரத்து 157. இதில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4,96,988, குணமடைந்தொர் எண்ணிக்கை 9, 52,744. பலி எண்ணிக்கை இதுவரை 33,425.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,704, பலியானோர் எண்ணிக்கை 654. தொடர்ச்சியாக 6/ம் நாளாக ஒரேநாளில் 45,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா பாதிப்பு எண்ணிக்கையில்  முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 1,48,905 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். பலியானவா்கள்  எண்ணிக்கை 13,656 என உயா்ந்துள்ளது.  மும்பையில் 100 நாட்களுக்கு பிறகு கரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக இன்று  700 நபா்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வைரஸ் பரவல் குறைந்துள்ளதைக் காட்டுகிறது.
 
Top