ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மூன்றாம்  ஊரடங்கு தளர்வுகள் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பாதிப்பு குறைந்த பகுதிகளில் மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு படிப்படியான தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுட்டுள்ளது.


வரும்  ஜூலை 31 ஆம் தேதியோடு முடிய உள்ள  பொது முடக்கம், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கடைபிடிக்க வேண்டிய மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

► இரவு நேரங்களில் யாரும் தெருக்களில் செல்லக்கூடாது.

► உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் அரசு விதிமுறைகளுடன் இயக்கலாம்.

► பள்ளி, கல்லூரிகள்  ஆகஸ்ட் 31 வரை திறக்கக் கூடாது.

► தின விழா முகக் கவசம் அணிந்து அரசு கட்டுபாடுகளுடன் நடத்தலாம்.

► வந்தே பாரத் திட்டத்தின் வழியாக வரும் விமானங்களுக்கு அனுமதி உண்டு.

► பூங்காக்கள், பார்கள், சமூக, அரசியல், விளையாட்டு, நீச்சல் குளம், சினிமா தியேட்டா்,  பொழுதுபோக்கு, மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் இவை அனைத்துக்கும் தடை.

► ஏற்கெனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம் இருக்கும். மாநில அரசு தளா்வுகளை மேற்கொள்ளலாம். கட்டுபடுத்தப்பட்ட இடத்திற்கு ஏற்ப மாறுபடும்.

► முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயம்.


► இ- பாஸ் இல்லாமல் மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

► மத்திய அரசு அளித்துள்ள விதிமுறைகளின் கீழ் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள், உள்நாட்டு விமான போக்குவரத்து முதலியன பின்பற்றப்பட வேண்டும்.

► 65 வயதுக்கு மேல் இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு குறைந்தவர்கள் அவசியத் தேவைகளின்றி வெளியே வரக்கூடாது.
இவை பொமு முடக்கத்தின் தளா்வாகும்.
 
Top