கொரானா பரவலை கவனத்தில் காெணடு அனைத்து கல்லூரிகளுக்கும் இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரிகள் இதில் அடங்காது.
இதன் காரணமாக கலை மற்றும் அறிவியல் படிப்புகள், பொறியியல் படிப்புகளில் இளநிலை மற்றும் முதுகலை படிப்பில் இறுதியாண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர் தேர்வுகளில் பெற்ற  மதிப்பெண்களை 70 சதவிகிதத்திற்கு கணக்கீடு செய்தும், முந்தைய செமஸ்டரின் இன்டா்னல் மதிப்பெண்களில் இருந்து 30 சதவிகித மதிப்பெண்களை கணக்கிட்டு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்சி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கணக்கிட்டு  தமிழக அரசு அரசாணை  வெளியிட்டு உள்ளது.


முந்தைய செமஸ்டரில் அரியர் பாக்கியிருந்தால் மீண்டும் அரியர் பாடத்திற்கான தேர்வை எழுதவேண்டும். கல்லூரிகள் திறந்த பின்னர் இந்த தேர்வுகள் நடத்தப்படலாம். 100 சதவிகிதம் அகமதிப்பீடு முறையில் விருப்ப பாடங்களுக்கான மதிப்பெண்  வழங்கப்படும்.

அக மற்றும் புற மதிப்பீட்டு அடிப்படையில் தேர்சிக்கான மதிப்பெண் பெறாத மாணவர்கள் அனைவருக்கும், கருணை அடிப்படையில் தேர்ச்சிக்கான மதிப்பெண் வழங்கப்படும்.

தொலை தூரக்கல்வியில் பயிலும் மாணவா்களுக்கு இறுதியாண்டு தவிர்த்து மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடக்காமல் இருப்பின் அவா்களுக்கு தேர்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்படும்.
 
Top