சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை விசாாித்துவரும் சிபிஐ அதிகாரிகளில் மேலும் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என சிபிஐ தரப்பு கூறியுள்ளது.


சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உட்பட 10 பேரில் ஸ்ரீதர் உள்ளிட்ட 8 பேரும் மதுரை சிறையில் உள்ளனா். இவா்களை போலீஸ் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்து வாக்குமூலம் வாங்கி உள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை விசாாித்துவரும்  சிபிஐ அதிகாரிகளான பவன்குமார், அஜய்குமார் மற்றும் கைதி சிறப்பு எஸ்ஐ பால்துரைக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆயுதப்படை காவலர் ரயில்வே மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் அனுமதிப்பட்டுள்ளனா். மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு எஸ்.ஐ., பால்துரையும் சோ்க்கப்பட்டுள்ளனா்.
 
Top