நேற்று ஒரேநாளில் மட்டுமே தமிழகத்தில் 6,785 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஜூலை சென்னையில் ஆரம்பத்தில் தினசரி  1000 த்திற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பாா்த்தால் தினமும் 3000திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரானோ  தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், நேற்று தமிழகத்தில் அதிகப்படியாக 6785 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.


தமிழகத்தில் நேற்று  சுகாதாரத்துறை 65,150 பரிசோதனைகள் மேற்கொண்டது. இதில் 6,785 பேருக்கு தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொற்று விபரம் (நபா்களில்)
சென்னையில் 1,299
விருதுநகரில்  424
செங்கல்பட்டில் 419
திருவள்ளூரில்  378
காஞ்சிபுரத்தில்  349
மதுரையில் 326
தூத்துக்குடியில் 313
கன்னியாகுமரியில் 266
தேனியில் 234
ராணிப்பேட்டையில் 222
திருச்சியில் 217
கோவையில் 189
தஞ்சையில் 186
கள்ளக்ககுறிச்சியில் 179
வேலூரில் 174
நெல்லையில் 171
விழுப்புரம் 164,
திருவண்ணாமலையில் 134
சேலத்தில் 122
 திருவாரூரில் 96
புதுக்கோட்டையில் 95 பேர்,
கடலூரில் 91
தென்காசியில் 93
சிவகங்கையில் 82
கிருஷ்ணகிரியில் 82
திண்டுக்கலில் 80
ராமநாதபுரத்தில் 72
திருப்பத்தூரில் 56
நாகையில் 46
அரியலூரில் 37தர்மபுரியில் 36
நீலகிரியில் 34
ஈரோட்டில் 25
நாமக்கலில் 28
திருப்பூரில் 18
பெரம்பலூரில் 16
கரூரில் 5

மேற்படி மாவட்ட வாாியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 749 ஆகும். நேற்று இதில் பெண்கள் 2,468 பேரும், ஆண்கள் 4,137 பேரும் ஆவா். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளவா்களில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 389 ஆண்கள், 78,337 பெண்கள், 23 திருநங்கைகள் என சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

6,504 பேர் மருத்துவமகையிலிருந்து நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலையில் 53,132 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனா். நேற்று  சிகிச்சை பலனின்றி தனியாா் மருத்துவ மனையில் 22ம் அரசு மருத்துவமனையில் 66ம் சோ்த்து மொத்தம் 88 நபா்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிாிழந்தவா்கள் வருமாறு...
சென்னையில் 22 பேர்,மதுரையில் 10 பேர்,தென்காசியில் 2 பேர், திருவண்ணாமலையில் 2 பேர், தேனியில் 2 பேர், வேலூர், திருச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகை , சேலம் , தூத்துக்குடி, திருப்பத்தூர், விருதுநகரில் 6 பேர், திருவள்ளூரில் 5 பேர், குமரியில் 5 பேர், கோவையில் 4 பேர், நெல்லையில் 4 பேர், காஞ்சிபுரத்தில் 4 பேர், செங்கல்பட்டில் 4 பேர், திண்டுக்கலில் 3 பேர், ராணிப்பேட்டையில் 3 பேர்,  சிவகங்கை , புதுக்கோட்டை, திருப்பூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒன்று. இவர்களில் 6 பேர் மட்டும் துணை நோய்கள் இல்லாமல் கொரோனாவினால் மட்டுமேஉயிா் இழந்தமவா்கள்.


8050114919460582502

TRENDING NOW

8050114919460582502