ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்கள தகுதி நீக்கம் செய்ய  தடை விதித்துள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமைல் நடக்கும் காங்கிரஸ் அரசுக்கு, துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள் எதிராக போர்க்கொடி உயர்த்தி வந்தனர். இவா்கள் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கூட கலந்துெகாள்ளவில்லை. மேலும் இவா்கள் 19 பேரும் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக கூறப்பட்டது. இதனடிப்படையில் காங்கிரஸ் கட்சி அளித்த புகாரை ஏற்று,. கட்சி தாவல் சட்டத்தின் கீழ் சபாநாயகர் சி.பி, ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார்.




19 எம்எல்ஏக்களும் எதிராக கோா்ட்டில் வழக்கு ெதாடா்ந்தனா். இந்த நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து நேற்று முன்தினம் சபாநாயகர் சிபி ஜோஷி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் பதவி நீக்க உத்தரவை பிறப்பிக்க கூடாது எனக் கேட்டுள்ளாா். அதற்கு அதிகாரம் கிடையாது. அதனால் உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதற்று தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.

இந்நிலையில் சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யவும், அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என்றும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
Top