ஸ்வப்னா வாக்குமூலத்தால் கேரளா தங்கம் கடத்தலில் புதிய திருப்பம் -
என்ஐஏ அதிகாரிகள் கேரளா தங்கம் கடத்தல் வழக்கு சம்பந்தமாக  ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்தினாா்கள். இதன் காரணமாக சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்டத்துக்கு புரம்பாக 30 கிலோ எடையுள்ள தங்கத்தை கடத்திய வழக்கில் அண்மையில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. இந்த கடத்தலில் 20க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு என்ஐஏ வால் விசாாிக்கப்பட்டாா்கள்.


விசாரணை முடிந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அடுத்த மாதம் 21-ம் தேதிவரை ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட சந்தீப் நாயர் ஆகியோரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.
என்ஐஏ அதிகாரிகளால் ஸ்வப்னா சுரேஷின் வங்கி கணக்குகளையும், லாக்கர்களையும் ஆய்வு செய்து 1 கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

என்ஐஏ அதிகாரிகள் ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்தியதில் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தப்பட்டதாக ஸ்வப்னா வாக்குமூலம் தந்துள்ளாா்.

அதேசமயம் கார்கோ விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தப்பட்டதாக ஸ்வப்னா தகவல் கூறினாா். இதன் காரணமாக  ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கும் கடத்தலில் தொடர்புடையதால் விசாரணை முடிக்கிவிடப்பட்டுள்ளது,
 
Top