கொரோனா முழுவீச்சில் பரவி வரும் இந்த காலகட்டத்தில் இதன் பாதிப்பை குறைக்க தற்போது பல மாநிலங்களில் வார இறுதியில்  ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.வார இறுதி மட்டும் போதாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிகத்து வருகிறது. ஆரம்ப காலத்தில் மும்பை, சென்னை, டெல்லி ஆகிய நகரங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்பட்டு இருந்தது. ஆனால் இன்று எல்லா மாநிலங்களிலும் கிராமங்கள் உட்பட நோயின் தாக்கம் கனிசமாக உயர்ந்து வருகிறது. இதன்  பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுதத்து  வருகின்றன. பிகார், ஜார்கண்ட், ஒடிசா, தமிழ்நாடு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வார இறுதி முழு ஊரடங்கை அமல்படுத்தியவண்ணம் இருக்கின்றன.

இந்த வார இறுதி ஊரடங்குபோதாது என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 9 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா பேச்சு நடத்தினாா். இன்றைய சூழலில் வார இறுதி முழு ஊரடங்கு பலன் தராது என அவர் தெரிவித்தார்.

 
Top