Bidvertiser2037290
தமிழகம் மாவட்டங்கள் முழுவதும் தீயாய் பரவும் கொரோனா.. சென்னையை மிஞ்சத் துடிக்கும் மாவட்டங்கள்
தமிழகத்தில் கொேரானா தினசாி பரவிவரும் நிலையில், இன்று புதியதாக 5,849 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையைப் போலவே  தமிழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டி போட்டுக்கொண்டு கொரானா பரவல் உச்சத்தை ெதாட்டவண்ணம் உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.


சென்னைக்கு அடுத்தபடியாகஉள்ள மாவட்டம், திருவள்ளூர். அங்கு 430 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், முதல் முறையாக 414 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 223 பேர், கோவை 178, திண்டுக்கல் 99, கள்ளக்குறிச்சி 86, காஞ்சிபுரம் 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி 152, மதுரை 197, புதுக்கோட்டை 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில்- 363, தூத்துக்குடி மாவட்டத்தில்- 327, திருச்சி மாவட்டத்தில்- 213, திருவண்ணாமலை மாவட்டத்தில்- 210, தேனி மாவட்டத்தில்/165, வேலூர் மாவட்டத்தில்- 137, நெல்லை மாவட்டத்தில் 120, தஞ்சைமாவட்டத்தில்-106 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்தில்-105, சேலம் மாவட்டத்தில்-99, ராமநாதபுரம் மாவட்டத்தில்-88, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்-86, தென்காசி மாவட்டத்தில்-85, கடலூர் மாவட்டத்தில்-78, சிவகங்கைமாவட்டத்தில் -70, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்-69, திருப்பத்தூர்மாவட்டத்தில்-60, புதுக்கோட்டைமாவட்டத்தில்-59, திருவாரூர்மாவட்டத்தில்-45, நாமக்கல் மாவட்டத்தில்-41, திருப்பூர் மாவட்டத்தில்-29, அரியலூர் மாவட்டத்தில்-26, பெரம்பலூர் மாவட்டத்தில்- 15, நாகைமாவட்டத்தில் -14, நீலகிரி மாவட்டத்தில் -12, தர்மபுரி மாவட்டத்தில்- 7, ஈரோடு மாவட்டத்தில் -6 , கரூர் மாவட்டத்தில்-4 என்ற அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது


8050114919460582502

TRENDING NOW

8050114919460582502