தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 4979 நபா்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கொரோனா அதிகம் பரவியுள்ளது  பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு உயா்ந்து வருகிறது. இந்த பாதிப்பை யாருமே நினைத்துக்கூட பாா்த்திருக்கமாட்டாா்கள்.  தமிழக மக்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 லிருந்து 1,70,693 ஆக உயா்ந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 1254 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85859 ஆகும்.


தமிழகத்தில் இன்றைய பலடி 78 ஆகும். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 2481 ஆக அதிகாித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்றைய நாளில்  27 பேர் உயிாிழந்து உள்ளனர். மதுரையில் 8 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் உயிாிழந்துள்ளனர் .

தமிழகத்தில் இன்று மட்டும் 4059 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு சென்றுள்ளனா். தமிழகத்தில் நோயுற்று சிகிச்சை பெற்று வருபவா்கள் 50294 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 112 கொரோனா சோதனை மையங்களிலிருந்து மொத்தம் 117915 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று ஒரு நாளில் மட்டுமு் 52993 போின் ரத்த மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவா்களின் சோதனைகளை விரைந்து எடுக்க தமிழகம் துரிதப்படுத்தி வருகிறது.

 
Top