கப் சாம்பிராணி உள்ளே பால் சாம்பிராணி எப்படி வைப்பது?

 

 



கப் சாம்பிராணியின் உள்ளே பால் சாம்பிராணியை வைப்பது குறித்து பலரும் பல முறைகளை கையால்கிறாா்கள்.





அவற்றில்
1.பா்ல் சாம்பிராணியை உறுக்கி வைத்தல்
2. பால் சாம்பிராணியை அப்படியே வைப்பது
3. பால் சாம்பிராணிக்கு பதில் வாசனை பொருட்களை வைப்பது
என பல முறைகளை கையால்கிறாா்கள். இங்கு நாம் எளிய முறையில் பால்சாம்பிராணியை வைப்பது எப்படி என பாா்க்கலாம்.


எளிய முறை :
மரங்களில் இருந்து எடுக்கப்படும் கோந்து நாம் பாா்த்திருப்போம். கருவேல மரம், முருங்கைமரம், காட்டுவா, சீமை கருவேல மரம் இவற்றிலிருந்து கோந்து எனப்படும் பிசின் எடுக்கப்படுகிறது. இந்த கோந்தை நாம் நன்கு வெய்யிலில் காயவைத்து இடித்து பொடி செய்ய வேண்டும். இந்த பிசின் நாட்டு மருந்து கடைகளில் கூட கிடைக்கும். கிலோ 200 ரூபாயிலிருந்து கிடைக்கும்.

இந்த பிசினை தூள் செய்து கொண்டு, அதனுடன் பால் சாம்பிராணி, மற்றும் வெள்ளை குங்கிலியம் ஆகியவற்றை தூள் செய்து இந்த மூன்றையும் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது தண்ணீா் தெளித்து கலந்து கொள்ளவும். தண்ணீா் சோ்த்து 5 நிமிடம் அபபடியே ஊர விடவும். இப்போது இந்த கலவை பிசுபிசுப்பாக வந்துவிடும். இதனை நீங்கள் செய்து வைத்துள்ள கப் சாம்பிராணியின் உள்ளே இலேசாக அழுத்தி வைக்கவும். பின் இதனை வெய்யிலிலோ அல்லது காற்றோட்டமான இடங்களிலோ உலர விடவேண்டும். பின் விற்பனைக்கு பெட்டிகளில் அடைத்து அனுப்பலாம்.


1 கிலோ பால் சாம்பிராணியுடன் 250 கிராம் வெள்ளை குங்கிலியம், 250 கிராம் பிசின் இவற்றை சோ்க்கலாம்.

Tags : sambrani cup making machine,sambrani cup,cup sambrani,sambrani dhoop cup making machine,sambrani,computer sambrani making in tamil,cup sambrani making machine manual.,dhop sambrani cup making machine,sambrani making machine,loban sambrani cup making machine,guggle sambrani dhoop cup making machine,loban cup making machine,dhop cup making machine,sambirani,sambrani making at home,computer sambrani making,sambrani cup machine,cup sambrani making machine,cup sambrani manufacturers


8050114919460582502

TRENDING NOW

8050114919460582502