சென்னை விமான நிலையம் நிவர் புயல் காரணமாக நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 7 மணி வரை மூடப்பட்டது. அது புயல் கரையை கடந்ததும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இன்று அதிகாலை புதுச்சேரி மரக்காணம் இடையே நிவர் புயல் கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக மழை காரணமாக சென்னை தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.


 
Top